தேசிய செய்திகள்

கடற்படை துணைத் தளபதியாக எஸ்.என்.கோர்மாடே பதவி ஏற்பு + "||" + Vice Admiral SN Ghormade assumes charge as Indian Navy's vice chief

கடற்படை துணைத் தளபதியாக எஸ்.என்.கோர்மாடே பதவி ஏற்பு

கடற்படை துணைத் தளபதியாக எஸ்.என்.கோர்மாடே பதவி ஏற்பு
கடற்படை துணைத் தளபதியாக எஸ்.என்.கோர்மாடே பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்படையில் 39 ஆண்டு சேவையாற்றிய பின் துணைத் தளபதி பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற ஜி.அசோக் குமாரிடம் இருந்து அப்பொறுப்பை எஸ்.என்.கோர்மாடே  ஏற்றுக் கொண்டார்.

துணைத் தளபதி பொறுப்பேற்றதும் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக, கடற்படை செயல்பாடுகள் தலைமை இயக்குநர், கிழக்கு கடற்படை கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி, பாதுகாப்புத்துறை பணியாளா் சேவைகள் கட்டுப்பாட்டு அதிகாரி போன்ற சவாலான பல பதவிகளை எஸ்.என்.கோர்மாடே வகித்துள்ளார்/

கடற்படை துணைத் தளபதி பொறுப்பை ஏற்கும் முன்பு, அவா் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியாளா் தலைமையகத்தில் முப்படைகளின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி பிரிவின் துணைத் தலைவா் பதவியை வகித்துள்ளார்.