கொரோனா நெருக்கடி; மேற்கு வங்காளத்தில் ஆண், பெண் ஆயுள் கைதிகளை விடுவிக்க முடிவு

மேற்கு வங்காளத்தில் கொரோனா நெருக்கடியை முன்னிட்டு மனிதநேய அடிப்படையில் ஆண், பெண் ஆயுள் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. கொரோனா பாதிப்புகளை அதிகம் சந்தித்து வரும் மாநிலங்களில் ஒன்றாக அது உள்ளது.
இந்நிலையில், சிறைகளில் தண்டனை பெற்று வரும் ஆயுள் கைதிகளை விடுவிக்க அரசு முன்வந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், சிறைகளில் நெருக்கடியை குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. அதனுடன், மனிதநேய அடிப்படையிலும், மேற்கு வங்காள அரசு ஆயுள் கைதிகளை விடுவிக்க முன்வந்துள்ளது.
இதன்படி, 60 வயதுக்கு கூடுதலான 61 ஆண் கைதிகளையும், 55 வயதுக்கு மேற்பட்ட 2 பெண் கைதிகளையும் தண்டனை காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்க அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
Related Tags :
Next Story