மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 558.41 புள்ளிகள் உயர்வு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 558.41 புள்ளிகள் உயர்வு
x
தினத்தந்தி 3 Aug 2021 8:29 AM GMT (Updated: 3 Aug 2021 8:29 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 558.41 புள்ளிகள் உயர்ந்து 53,509.04 ஆக உள்ளது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று திடீரென 558.41 புள்ளிகள் உயர்ந்து இதுவரை இல்லாத சாதனை பதிவாக 53,509.04 புள்ளிகளாக உள்ளது.  இதற்கு முந்தின தினத்தில் சென்செக்ஸ் குறியீடு 363.79 புள்ளிகள் (0.69 சதவீதம்) உயர்வுடன் 52,950.63 ஆக முடிவடைந்து இருந்தது.

கடந்த பிப்ரவரியில் முதன்முறையாக 52 ஆயிரம் புள்ளிகளை கடந்து இருந்தது.  இந்நிலையில், சென்செக்ஸ் குறியீடு சாதனை பதிவாக 53,500 புள்ளிகளை கடந்து உள்ளது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 122.10 புள்ளிகள் (0.77 சதவீதம்) உயர்வடைந்து 15,885.15 புள்ளிகளாக நேற்று முடிவடைந்து இருந்தது.  இந்நிலையில், நிப்டி குறியீடு 16 ஆயிரம் புள்ளிகளை இன்று கடந்து உள்ளது.


Next Story