இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை; மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்


இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை; மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 3 Aug 2021 11:40 AM GMT (Updated: 2021-08-03T17:10:08+05:30)

இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,
 
மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.  இந்தியாவை பொருத்தவரையில் 2-வது அலை பரவல் இன்னும் ஓயவில்லை.  

ஜூன் 1 ஆம் தேதி 279 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பாதிப்பு  பதிவானது.  தற்போது அந்த எண்ணிக்கை 57 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. கேரளாவில் 10 மாவட்டங்கள் உள்பட மொத்தம் 18 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. 

இந்த 18 மாவட்டங்களில் 47.5 சதவீதம் பாதிப்புகள் பதிவாகின்றன.  நாடு முழுவதும் 44 மாவட்டங்களில்  பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. கேரளா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மாவட்டங்கள் அடங்கியுள்ளன” என்றார்.. 

Next Story