மின்சார வாகனங்களுக்கு பதிவுச் சான்றிதழ் கட்டணம் ரத்து: நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 Aug 2021 7:49 PM GMT (Updated: 3 Aug 2021 7:49 PM GMT)

மின்சார வாகனங்களுக்கு பதிவுச் சான்றிதழ் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மின்சார வாகனங்களுக்கு பதிவுச் சான்றிதழ், அதை புதுப்பிப்பதற்கான கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களின் புதிய பதிவுக்கான கட்டணத்தில் இருந்தும் விலக்கு அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story