டெல்லி எம்.எல்.ஏ.க்களுக்கு மாத சம்பளம் ரூ.90 ஆயிரமாக உயர்வு


டெல்லி எம்.எல்.ஏ.க்களுக்கு மாத சம்பளம் ரூ.90 ஆயிரமாக உயர்வு
x
தினத்தந்தி 3 Aug 2021 10:06 PM GMT (Updated: 2021-08-04T03:36:40+05:30)

சம்பளத்தை உயர்த்திய பிறகும், நாட்டிலேயே குறைவான சம்பளம் பெறுவது டெல்லி எம்.எல்.ஏ.க்கள்தான் என்று டெல்லி அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.க்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக சம்பளம் உயர்த்தப்படவில்லை. அதனால், மற்ற மாநிலங்களின் எம்.எல்.ஏ.க்களுக்கு சமமாக சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று, சம்பளத்தை உயர்த்த மத்திய உள்துறை அமைச்சகம் சிபாரிசு செய்தது. அதையடு்த்து, டெல்லி எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.90 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதில், சம்பளம் ரூ.30 ஆயிரமாகவும், இதர படிகள் ரூ.60 ஆயிரமாகவும் இருக்கும்.

இதுவரை அவர்கள் சம்பளம் ரூ.12 ஆயிரம், இதர படிகள் ரூ.41 ஆயிரம் என மொத்தம் ரூ.53 ஆயிரம் பெற்று வந்தனர். சம்பளத்தை உயர்த்திய பிறகும், நாட்டிலேயே குறைவான சம்பளம் பெறுவது டெல்லி எம்.எல்.ஏ.க்கள்தான் என்று டெல்லி அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

Next Story