காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் பாலியல் குற்றங்களை ராகுல் பேசாதது ஏன்? பா.ஜனதா கேள்வி


காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் பாலியல் குற்றங்களை ராகுல் பேசாதது ஏன்? பா.ஜனதா கேள்வி
x
தினத்தந்தி 5 Aug 2021 7:32 AM IST (Updated: 5 Aug 2021 7:32 AM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீ்ஷ்கர் ஆகிய மாநிலங்களில் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து ராகுல்காந்தி பேசாமல் இருப்பதுதான் கண்டனத்துக்குரியது.

புதுடெல்லி, 

பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை ராகுல்காந்தி சந்தித்ததில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீ்ஷ்கர் ஆகிய மாநிலங்களில் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து ராகுல்காந்தி பேசாமல் இருப்பதுதான் கண்டனத்துக்குரியது.

அங்கெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட்டு, அரசியல் ஆதாயம் பெற வாய்ப்புள்ள இடங்களில் கண்ணை திறக்கிறார். அரசியல் லாபத்தை பெருக்கிக்கொள்ள தலித்துகளையும், ஏழைகளையும் பயன்படுத்துவது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story