ஆக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு - உத்தராகண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி


ஆக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு  - உத்தராகண்ட் முதல்-மந்திரி  புஷ்கர் சிங் தாமி
x
தினத்தந்தி 7 Aug 2021 3:41 AM GMT (Updated: 7 Aug 2021 3:41 AM GMT)

ஆக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தராகண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

டேராடூன்,

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஆக்கியில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்தை தவற விட்டது. இதனால் மனம் உடைந்த இந்திய வீராங்கனைகள் கண்ணீர் விட்டனர். 

பதக்க வாய்ப்பை இழந்த இந்திய ஆக்கி அணியினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி அவர்களது செயல்பாட்டை பாராட்டினார்.

இந்நிலையில்,  டோக்கியோ ஒலிம்ப்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியில் இடம்பிடித்த வந்தனா கட்டாரியாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தராகண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

Next Story