இந்தியாவில் ஒரே நாளில் 38,628 பேருக்கு தொற்று உறுதி


இந்தியாவில் ஒரே நாளில் 38,628 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 7 Aug 2021 4:28 AM GMT (Updated: 7 Aug 2021 4:28 AM GMT)

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 38 ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

புதுடெல்லி,

கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்த இந்தியா, இரண்டாவது அலையை எதிர்த்து இன்னும் தனது நெடிய போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தினசரி தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்கிறது. இன்று சற்று குறைந்து உள்ளது.

இன்று ஒரே நாளில் மேலும் 38 ஆயிரத்து ,628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 18 லட்சத்து 95 ஆயிரத்து 385 ஆக உயர்ந்துள்ளது. 

காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 617 பேர் இறந்தனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 27 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து 40 ஆயிரத்து 017  பேர் மீண்டு, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதன்மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியோர் எண்ணிக்கை 3 கோடியே 10 லட்சத்து 55 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 12 ஆயிரத்து 153  ஆக இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 49,55,138 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 50,10,09,609 ஆக உயர்ந்துள்ளது.

3-வது அலையில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதோடு, முககவசம் அணிதல், கைச்சுத்தம் பராமரித்தல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்லாதிருத்தல் ஆகியவற்றை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Next Story