மத்திய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து


மத்திய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து
x
தினத்தந்தி 7 Aug 2021 10:50 PM GMT (Updated: 7 Aug 2021 10:50 PM GMT)

மத்திய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளித்தார்.

புதுடெல்லி,

 ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சா்களுக்கு  தேநீா் விருந்து அளித்தாா்.  ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரும் கலந்து கொண்டனா்.

தேநீா் விருந்துக்கு வந்த மத்திய அமைச்சா்கள், இணையமைச்சா்களை  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். அதனைத் தொடா்ந்து அவா் அமைச்சா்களுக்கு தேநீா் விருந்து அளித்தாா்.  ஜனாதிபதி மாளிகை  செயலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.


Next Story