அமைச்சரவை செயலாளர் பணிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு மத்திய அரசு உத்தரவு

மத்திய அமைச்சரவை செயலாளராக இருப்பவர் ராஜீவ் கவுபா. இவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.
புதுடெல்லி,
மத்திய அமைச்சரவை செயலாளராக இருப்பவர் ராஜீவ் கவுபா. இவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் அவருக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த பதவி நீட்டிப்புக்கு பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் நியமனங்கள் குழுவும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. 1982-ம் ஆண்டு ஜார்கண்ட் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜீவ் கவுபா, முன்னதாக மத்திய உள்துறை செயலாளராக பதவி வகித்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு மத்திய மந்திரிசபை செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஒருங்கிணைந்த காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை உருவாக்கியதில் முக்கிய பங்கு இவரையே சாரும்.
இவர் ஏற்கனவே உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சக செயலாளர் என மத்திய அரசில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.
சர்வதேச நிதியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக 4 ஆண்டுகள் பணியாற்றி இருக்கும் இவர், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story