எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே விவாதங்கள் இன்றி 3 மசோதாக்கள் நிறைவேற்றம்

எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே விவாதங்கள் இன்றி 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் இன்று புயலை கிளப்பியது. அவை தொடங்கியதில் இருந்தே உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால், மக்களவை காலை 11.30 மணி வரையும், மாநிலங்களவையும் நண்பகல் 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவை கூடியதும் மக்களவையில் மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
உறுப்பினர்கள் அமளிக்கு இடையே, விவாதங்கள் இன்றி 3 மசோதாக்கள் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை திருத்த மசோதா, டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) மசோதா, அரசியலமைப்பு (பழங்குடியினர்) ஆணை மசோதா 2021- ஆகியவை மக்களவையில் நிறைவேறியது.
Related Tags :
Next Story