37 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமாக அதிகரிப்பு- மத்திய சுகாதாரத்துறை


37 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமாக அதிகரிப்பு- மத்திய சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 10 Aug 2021 12:17 PM GMT (Updated: 10 Aug 2021 12:17 PM GMT)

டந்த 2 வாரங்களில் நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை  இணை செயலாளர் லவ் அகர்வால் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2 வாரங்களில் நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதில் அதிகபட்சமாக கேரளம், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாவட்டங்கள் உள்ளன. கேரளத்தில் 11 மாவட்டங்களும், கர்நாடகத்தில் 5 மாவட்டங்களும் கடந்த 2 வாரங்களில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. 

நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளத்தில் 1,77,091 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது” என்றார்

Next Story