முதலைக் கண்ணீர் விடக்கூடாது , எதிர்க்கட்சிகள் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- மத்திய மந்திரி அனுராக் தாகூர்


முதலைக் கண்ணீர் விடக்கூடாது , எதிர்க்கட்சிகள் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- மத்திய மந்திரி அனுராக் தாகூர்
x
தினத்தந்தி 12 Aug 2021 3:38 PM IST (Updated: 12 Aug 2021 3:38 PM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், முதலைக் கண்ணீர் விடக்கூடாது என மத்திய மந்திரி அனுராக் தாகூர் கூறினார்.

புதுடெல்லி: 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில்  ‘பெகாசஸ்’ உளவு விவகாரம், வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டன. 

இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 

மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் கைகோர்த்து ஒற்றுமையாக செயல்பட்டன. இதனால் மத்திய அரசு திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே மழைக்கால கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இதுகுறித்து மத்திய மந்திரி அனுராக் தாகூர் கூறியதாவது:-

எம்.பி.க்கள்.தங்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவார்கள் என மக்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில்  அராஜகம் நிகழ்த்துகின்றன. அவர்கள் மக்கள் மற்றும் வரி செலுத்துவோர் பணம் பற்றி கவலைப்படவில்லை. நடந்தது கண்டிக்கத்தக்கது.முதலைக் கண்ணீர் வடிப்பதற்குப் பதிலாக, அவர்கள் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அனைத்து கட்சி கூட்டத்தின் முதல் நாளிலிருந்து சபையை  நடத்த அனுமதிக்க மாட்டோம் என்பதில் குறியாக இருந்தனர். இது திரிணாமுல் காங்கிரஸ்  மற்றும் காங்கிரசால் நடத்தப்பட்டது.எங்கள் மூத்த தலைவர்களும் நானும் அவர்களுடன் பலமுறை பேசினோம், புதிதாக பதவியேற்ற மந்திரிகளை அறிமுகப்படுத்த கூட அனுமதிக்க நாங்கள் அவர்களிடம் கேட்டோம்.ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை என கூறினார்.

Next Story