தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் + "||" + President Ram Nath Kovind will address the nation tomorrow on the eve of the 75th Independence Day: President's Secretariat

75-வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

75-வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை உரையாற்ற உள்ளார்.
புதுடெல்லி,

நாடு முழுவதும் வரும் 15-ம் தேதி 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

முதலில் இந்தியிலும், அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் அவர் உரையாற்றுகிறார். பின்னர் அந்தந்த மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை மொழி மாற்றம் செய்யப்பட்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதேபோல் இரவு 9.30 மணிக்கு அகில இந்திய வானொலியிலும் ஜனாதிபதியின் உரை பிராந்திய மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இரண்டு நாள் பயணமாக லடாக் செல்கிறார் ராம்நாத் கோவிந்த்
இரண்டு நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஜம்மு காஷ்மீா் மற்றும் லடாக் செல்கிறாா்.
2. நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துவது அவசியம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துவது அவசியம் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
3. ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்க மூத்த வக்கீல்கள் முன்வர வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்
ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்க மூத்த வக்கீல்கள் முன்வர வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
4. மாநிலத்தின் பொன்விழாவையொட்டி இமாசலபிரதேச சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு
இமாசலபிரதேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்றார்.
5. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த வாரம் உத்தரபிரதேசம் பயணம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வருகிற 26-ந் தேதி முதல் 4 நாட்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். அவர், லக்னோவில் உள்ள ராஜ்பவனில் தங்குவார்.