மத்திய அரசின் அழுத்தம் காரணமாக எதிர்க்கட்சி தலைவர்களின் டுவிட்டர் பக்கம் முடக்கம்; தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு


மத்திய அரசின் அழுத்தம் காரணமாக எதிர்க்கட்சி தலைவர்களின் டுவிட்டர் பக்கம் முடக்கம்; தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Aug 2021 8:20 PM GMT (Updated: 13 Aug 2021 8:20 PM GMT)

மத்திய அரசின் அழுத்தம் காரணமாக எதிர்க்கட்சி தலைவர்களின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டதாக தேசியவாத காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

மத்திய அரசின் அழுத்தம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணின் குடும்பத்தினருடன் சந்தித்த படத்தை அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து தேசிய குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு ஆணையம் டுவிட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து டுவிட்டர் நிறுவனம் ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தை தற்காலிகமாக முடக்கியது. இந்தநிலையில் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக எதிர்க்கட்சி தலைவர்களின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

தெளிவுப்படுத்த வேண்டும்
இதுகுறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளரும், மந்திரியுமான நவாப் மாலிக் கூறுகையில், ‘‘சமீபத்தில் டுவிட்டர் இந்தியாவுக்கும், மத்திய அரசுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்தநிலையில் தற்போது எதிர்க்கட்சி தலைவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இது அழுத்தம் காரணமாக செய்யப்பட்டுள்ளது. எந்த வகையான பதிவுகள் நீக்கப்படும், கணக்குகளை முடக்குவதற்கான காரணங்கள் குறித்த விதிகளை டுவிட்டர் நிறுவனம் தெளிவுப்படுத்த வேண்டும். விதியை மீறிய அனைத்து கணக்குகளையும் டுவிட்டர் முடக்குமா?. மேலும் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதில் தெளிவில்லை என்பதால் டுவிட்டர் இந்தியா மத்திய அரசின் அழுத்தத்திற்கு கீழ் செயல்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது" என்றார்.

Next Story