இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,667-பேருக்கு கொரோனா


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,667-பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 Aug 2021 9:45 AM IST (Updated: 14 Aug 2021 9:45 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 480- பேர் உயிரிழந்துள்ளனர்

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- “  கடந்த 24 மணி நேரத்தில் 38,667- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒரே நாளில் 478- பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்பில் இருந்து 35,743- பேர் குணம் அடைந்துள்ளனர்.   கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,87,673- ஆக உள்ளது.  இந்தியாவில் வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 2.05 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 53.61 கோடியாக உள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story