தேச கட்டுமான பணியில் மாணவர்கள் 75 மணிநேரம் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்; மத்திய மந்திரி அறிவுறுத்தல்


தேச கட்டுமான பணியில் மாணவர்கள் 75 மணிநேரம் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்; மத்திய மந்திரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 15 Aug 2021 12:17 AM GMT (Updated: 2021-08-15T05:47:29+05:30)

அடுத்த ஆண்டு மாணவர்கள் தேச கட்டுமான பணியில் குறைந்தது 75 மணிநேரம் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என மத்திய மந்திரி கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.


புதுடெல்லி,

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மத்திய மந்திரி கிஷன் ரெட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசும்போது, அடுத்த ஆண்டு மாணவர்கள் தேச கட்டுமான பணியில் குறைந்தது 75 மணிநேரம் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.

அவற்றில் மரம் நடுதல், அனாதை சிறுவர்களுக்கு பயிற்றுவித்தல், முதியோர் காப்பகத்தில் தன்னார்வலராக பணிபுரிதல், ஏழைகளுக்கு அதிகாரம் கிடைக்க செய்தல் உள்ளிட்ட ஏதேனும் பணிகளில் அவர்கள் தங்களை அர்ப்பணித்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.


Next Story