திருவனந்தபுரத்தில் இளம்பெண்ணுக்கு ஒரே நேரத்தில் 2 தடுப்பூசி - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி


திருவனந்தபுரத்தில் இளம்பெண்ணுக்கு ஒரே நேரத்தில் 2 தடுப்பூசி - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
x
தினத்தந்தி 16 Aug 2021 3:58 AM GMT (Updated: 2021-08-16T09:28:41+05:30)

திருவனந்தபுரத்தில் இளம்பெண்ணுக்கு ஒரே நேரத்தில் 2 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

திருவனந்தபுரம், மணியரா என்ற இடத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் நேற்று திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட சென்றார். அப்போது, அவருக்கு 2 செவிலியர்கள் அடுத்தடுத்து 2 கொரோனா தடுப்பூசி போட்டதாக தெரிகிறது. 

அந்த பெண்ணுக்கு உடல் சோர்வு ஏற்பட்டதை தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story