டோக்கியோ ஒலிம்பிக் குழுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

டோக்கியோ ஒலிம்பிக் குழுவை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று சந்தித்தார்.
புதுடெல்லி,
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ந் தேதி வெகுவிமரிசையாக தொடங்கியது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 33 வகையான விளையாட்டுகளில்பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி பரவசப்படுத்தினர்.
இந்தியாவுக்குஇனிமையான ஒரு ஒலிம்பிக் என்றால் அது மிகையாகாது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கமும், பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிகுமார் வெள்ளிப்பதக்கமும், குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஆக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் என இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியது.
இதில் தடகளத்தில் இந்தியா தங்கம் வென்றதில்லையே என்ற நூற்றாண்டு கால ஏக்கத்தை ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தணித்தது முத்தாய்ப்பாக அமைந்தது. ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற அதிகபட்ச பதக்கங்கள் இது தான்.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் குழுவை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று சந்தித்தார். அப்போது குழுவினருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் ஈட்டி எறிதலில் தங்க பதக்கம் வெண்ற நீரஜ் சோப்ரா, பேட்மிண்டனில் வெண்கலப்பதக்கம் பி.வி.சிந்துவுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Related Tags :
Next Story