ஆப்கனில் சிக்கியுள்ள 200 சீக்கியர்களை மீட்க வேண்டும்: பஞ்சாப் முதல் மந்திரி வலியுறுத்தல்

ஆப்கனில் சிக்கியுள்ள 200 சீக்கியர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாப் முதல் மந்திரி வலியுறுத்தியுள்ளார்.
அமிர்தசரஸ்,
ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் சென்றுள்ளதால், அங்கிருந்து வெளிநாட்டவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முயன்று வருகின்றனர். தலைநகர் காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், காபூல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள 200- சீக்கியர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
Related Tags :
Next Story