நினைவு தினம் அனுசரிப்பதால் மட்டும் பிரிவினையால் ஏற்பட்ட வலி போய்விடாது: சிவசேனா


நினைவு தினம் அனுசரிப்பதால் மட்டும் பிரிவினையால் ஏற்பட்ட வலி போய்விடாது: சிவசேனா
x
தினத்தந்தி 16 Aug 2021 7:17 PM GMT (Updated: 16 Aug 2021 7:17 PM GMT)

நினைவு தினம் அனுசரிப்பதால் மட்டும் பிரிவினையால் ஏற்பட்ட வலிகள் போய்விடாது என சிவசேனா கூறியுள்ளது.

மனங்களும் பிரிக்கப்பட்டு விட்டன

பாகிஸ்தான் பிரிந்ததை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14-ந் தேதியை பிரிவினை கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.

இதுகுறித்து சிவசேனா கட்சி சாம்னாவில் கூறியிருப்பதாவது:-

நாடுகள் பிரிக்கப்பட்டது போல, மனங்களும் பிரிக்கப்பட்டு விட்டன. மறைந்த பிரதமர் வாஜ்பாய் லாகூருக்கு பஸ்விட்டு சமாதானத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார். நரேந்திர மோடியும் கூட பாகிஸ்தானில் பிரதமர் நவாஷ் ஷெரிப்பை சந்தித்து பேசினார். ஆனால் தற்போது அவர் பழைய காயத்தை திருப்பி எடுத்து உள்ளார். பிரிவினைவாத வலிக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மட்டும் தான் பழிதீர்த்து உள்ளார். 2 நாடுகள் விதையை முதலில் போட்டவர் சர் செய்யது அகமது. அது முஸ்லிம் லீக்கால் ஆதரிக்கப்பட்டது. இந்து, முஸ்லிம் மோதலை தீர்ப்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக காங்கிரஸ் தலைவர் பிரிவினையை ஆதரித்தனர். ஆனால் அது நடக்கவில்லை.

வலி போய்விடாது
நினைவு தினம் அனுசரிப்பதால் மட்டும் பிரிவினையால் ஏற்பட்ட வலி போய்விடாது. திட்டவட்டமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். 75 ஆண்டுகள் ஆன பிறகு பிரிவினையால் ஏற்பட்ட வலிகள் மறைந்துவிடவில்லை. பா.ஜனதாவின் எல்.கே. அத்வானி மட்டுமே பிரிவினையால் பாதிக்கப்பட்ட தலைவர் ஆவார்.பிரிவினையால் ஏற்பட்ட முந்தைய வலியில் இருந்து மற்றொரு பிரிவினைக்காக விதை விதைக்கப்படாமல் இருப்பதை தற்போது ஆட்சியாளர்கள் கவனித்து கொள்ள வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் காஷ்மீர் பண்டிதர்களுக்கு வீடும், உரிமையும் வழங்கப்பட்டு இருந்தால் பலவற்றை சாதித்து இருக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story