டெல்லி ஐ.நா தகவல் மையம் முன்பு தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம்


டெல்லி ஐ.நா தகவல் மையம் முன்பு தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2021 4:22 AM IST (Updated: 17 Aug 2021 4:22 AM IST)
t-max-icont-min-icon

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் கே.வி.இளங்கீரன் தலைமையில் 25 பேர் தலைநகர் டெல்லி சென்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.

முதலில் டெல்லி ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய இவர்களை போலீசார் டெல்லி-அரியானா எல்லைப் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை டெல்லியில் உள்ள ஐ.நா. சபை தகவல் மையம் முன்பு தமிழக விவசாயிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இன்று (செவ்வாய்க்கிழமை) விவசாயிகள் தமிழகம் திரும்புகிறார்கள்.

விவசாயிகள் போராட்டத்தை உலக நாடுகள் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக ஐ.நா. தகவல் மையம் முன்பு போராட்டம் நடத்தியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story