மேகாலயா முதல் மந்திரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


மேகாலயா முதல் மந்திரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 16 Aug 2021 11:22 PM GMT (Updated: 16 Aug 2021 11:22 PM GMT)

மேகாலயா முதல் மந்திரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது.



ஷில்லாங்,


வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல் மந்திரி கான்ராட் சங்மா தலைமையில் மேகாலயா ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது.  இங்கு தேசிய விடுதலை கவுன்சில் என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் செரிஸ்டர்பீல்ட் தங்கேவ், மனம் திருந்தி 2018ல் அரசிடம் சரண் அடைந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தங்கேவ் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தங்கேவ் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். தங்கள் மீது கத்தியுடன் பாய்ந்த தங்கேவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து மேகாலயாவில் கலவரம் வெடித்துள்ளது. தலைநகர் ஷில்லாங்கில், பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.  முதல் மந்திரி கான்ராட் சங்மா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அவர், அரசு பங்களாவில் இருந்ததால் உயிர் தப்பினார்.  குண்டு வீசப்பட்ட வீட்டில் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏதுமில்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story