ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்


ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2021 2:40 PM GMT (Updated: 17 Aug 2021 2:40 PM GMT)

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழல் குறித்தும், அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து இந்தியர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story