இமாசல பிரதேச நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது.
கின்னார்,
இமாசல பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் நுகல்சாரி பகுதியில் கடந்த 11ந்தேதி பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பேருந்து, லாரி மற்றும் 4 கார்கள் சிக்கி கொண்டன.
இந்த நிலச்சரிவில் வாகனங்கள் சிக்கியதில் அதில் பயணம் செய்தவர்களில் பலர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த பணியில் ஈடுபட்டு உள்ள இந்தோ-திபெத் எல்லை போலீசார் படையினர் இன்று 3 உடல்களை மீட்டு உள்ளனர்.
இதனால், இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது. முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கடந்த வியாழ கிழமை அறிவிப்பு வெளியிட்டார்.
Related Tags :
Next Story