மராட்டியத்தில் போதை பொருள் கடத்தல்; நைஜீரியர்கள் 3 பேர் கைது


மராட்டியத்தில் போதை பொருள் கடத்தல்; நைஜீரியர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2021 5:07 PM GMT (Updated: 2021-10-04T22:37:18+05:30)

மராட்டியத்தில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புனே,

மராட்டியத்தின் மும்பை நகரில் நைகாவன் என்ற பகுதியில் போதை பொருள் கடத்தல் நடைபெறுகிறது என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், 1,126 கிராம் எடை கொண்ட போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு, நைஜீரிய நாட்டை சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளனர்.  வழக்கு ஒன்றை பதிவு செய்து தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.


Next Story