காஷ்மீரில் ஒரே நாளில் 1.78 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்


காஷ்மீரில் ஒரே நாளில் 1.78 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்
x
தினத்தந்தி 4 Oct 2021 7:22 PM GMT (Updated: 4 Oct 2021 7:22 PM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மிக அதிக அளவாக ஒரே நாளில் 1.78 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன.


ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.  இதில், ஒரே நாளில் மிக அதிக அளவாக 1.78 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன.

இதுபற்றி காஷ்மீர் துணை நிலை கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று (திங்கட்கிழமை) ஒரே நாளில் 1.78 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன.  காஷ்மீரில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிக எண்ணிக்கை இதுவாகும் என்று தெரிவித்து உள்ளது.


Next Story