புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 Oct 2021 4:38 AM IST (Updated: 5 Oct 2021 4:38 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை, 

வங்க கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல  பெய்து வருகிறது.

அதன்படி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்பட மொத்தம் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (செவ்வாய்கிழமை) கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான யும் பெய்யக்கூடும்.

நாளை (புதன்கிழமை) புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
1 More update

Next Story