கேரளாவில் 135 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது- இந்திய வானிலை ஆய்வு மையம்
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
கொச்சி,
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் மண்ணில் புதைந்தன. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35ஆக உயர்ந்து உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கேரளாவில் நடப்பு மாதம் 135 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் 19 ஆம் தேதி வரையில் இயல்பான மழை அளவு 192.7 மி.மீட்டராக இருக்கும் எனவும் ஆனால், நடப்பு ஆண்டு 435.5 மி.மீட்டர் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story