கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமித்ஷா உத்தரகாண்ட் வருகை


கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமித்ஷா உத்தரகாண்ட் வருகை
x
தினத்தந்தி 20 Oct 2021 9:20 PM GMT (Updated: 20 Oct 2021 9:20 PM GMT)

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்துறை மந்திரி அமித்ஷா இன்று உத்தரகாண்ட் சென்றுள்ளார்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, அம்மாநிலத்தின் குமன் மாகாண பகுதிக்கு உள்பட்ட நைனிதா, சம்பவாட், அல்மொரா, பிதோரகர்க், உதம்சிங் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவால் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது. 

அம்மாநிலத்தின் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 பேர் காயமடைந்துள்ளனர். கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் 5 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட உள்துறை மந்திரி அமித்ஷா இன்று உத்தரகாண்ட் சென்றுள்ளார். டேராடூன் விமான நிலையத்திற்கு வந்த அமித்ஷாவை உத்தரகாண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் டாமி நேரில் சென்று வரவேற்பு அளித்தார். 

கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அமித்ஷா இன்று ஹெலிகாப்டரில் பயணம் செய்து பார்வையிட உள்ளார். மேலும், கனமழையால் ஏற்பாட்ட பாதிப்புகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

Next Story