டெல்லியில் டெங்கு அதிகரிப்பு: நிரம்பி வழியும் வார்டுகள்... தரையில் நோயாளிகள்


டெல்லியில் டெங்கு அதிகரிப்பு:  நிரம்பி வழியும் வார்டுகள்... தரையில் நோயாளிகள்
x
தினத்தந்தி 21 Oct 2021 10:56 AM GMT (Updated: 21 Oct 2021 10:56 AM GMT)

டெல்லியில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்த நிலையில், நோயாளிகள் தரையில் இருந்தபடி சிகிச்சை பெற கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.


புதுடெல்லி,

டெல்லி உள்பட நாடு முழுவதும், கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில் பருவமழையை முன்னிட்டு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  கடந்த சில நாட்களுக்கு முன் மொத்த டெங்கு பாதிப்புகள் 723 பேருக்கு கூடுதலாக பதிவானது.

இவற்றில் இந்த அக்டோபரில் 382 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தின.  இந்த நிலையில், டெல்லியில் டெங்கு பாதிப்புக்கு முதன்முறையாக கடந்த 18ந்தேதி ஒருவர் பலியானார்.  இதனால், சுகாதார பணிகளை தீவிரப்படுத்த அரசு நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் டெங்கு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  இதனை முன்னிட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் உறவினர்கள் என பலரது வருகையால் வார்டு எண் 13 நிரம்பி வழிகின்றன.

இதனையடுத்து நோயாளிகள், தரையில் இருந்தபடியும் மற்றும் வாசல் பகுதியில் இருந்தபடியும், சிகிச்சை பெற கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.


Next Story