ஓடும் ரெயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பயணி; காப்பாற்றிய ரெயில்வே பெண் போலீஸ்


ஓடும் ரெயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பயணி; காப்பாற்றிய ரெயில்வே பெண் போலீஸ்
x
தினத்தந்தி 21 Oct 2021 9:10 PM GMT (Updated: 21 Oct 2021 9:10 PM GMT)

ஓடும் ரெயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண் பயணியை ரெயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் காப்பாற்றினார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் சண்ட்ஹர்ட்ஸ் ரோடு ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டது. அப்போது, 50 வயது நிரம்பிய பெண் ஓடும் ரெயிலில் ஏற முயற்சித்தார். ரெயில் வேகமாக சென்றதால் அந்த பெண் ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டார். ரெயில் புறப்பட்டதும் அந்த பெண்ணும் ரெயிலில் இழுத்து செய்யப்பட்டார்.

அப்போது, அந்த ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஸ்வப்னா கோல்கர் என்ற ரெயில்வே பெண் போலீஸ் பயணி ரெயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே சிக்கியதை பார்த்தார். உடனே துரிதமாக செயல்பட்ட போலீஸ் ஸ்வப்னா ரெயிலுக்கும், தண்டவாளத்திற்கும் இடையே சிக்கிய பெண் பயணியை பத்திரமாக மீட்டார். இந்த சம்பவம் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.

இந்த சிசிடிவி பதிவை ரெயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டது. மேலும், 50 வயது நிரம்பிய பெண்ணை தனது உயிரையும் பொருட்படுத்தாமல், காப்பாற்றிய பெண் போலீஸ் ஸ்வப்னாவுக்கு ரெயில்வே நிர்வாகம் வாழ்த்து தெரிவித்துள்ளது. ஸ்வப்னாவின் செயலுக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



Next Story