இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டி தேச நலனுக்கு எதிரானது: பாபா ராம்தேவ் பாய்ச்சல்


இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டி தேச நலனுக்கு எதிரானது: பாபா ராம்தேவ் பாய்ச்சல்
x
தினத்தந்தி 24 Oct 2021 12:07 PM IST (Updated: 24 Oct 2021 12:07 PM IST)
t-max-icont-min-icon

20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி மோதுவது தேச நலனுக்கு எதிரானது என்று யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.

நாக்பூர்,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சமீப காலமாக எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி அப்பாவி பொதுமக்களை குறிவைக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில்,  இரு நாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடத்துவது சரியா என அரசியல் தலைவர்கள் பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ராம்தேவ் கூறுகையில்,  இந்தியா ,பாகிஸ்தான் அணி கிரிக்கெட் போட்டிகள் இன்றைய சூழலுக்கு நடத்தக்கூடாது. இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடக்கூடாது, அவ்வாறு விளையாடுவது தேச நலனுக்கு எதிரானது. கிரிக்கெட் விளையாட்டும், பயங்கரவாதமும் விளையாட்டும் ஒரே நேரத்தில் நடைபெறக் கூடாது” என்றார். 

1 More update

Next Story