மத்திய அரசு டாடா சன்ஸ் இடையே ஏர் இந்தியா கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்து


மத்திய அரசு டாடா சன்ஸ் இடையே ஏர் இந்தியா கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்து
x
தினத்தந்தி 25 Oct 2021 9:27 PM GMT (Updated: 25 Oct 2021 9:27 PM GMT)

ஏர் இந்தியா பங்குகளை டாடா நிறுவனம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை டாடா நிறுவனத்துக்கு விற்பதற்கு விருப்பம் தெரிவிக்கும் கடிதத்தை மத்திய அரசு கடந்த 11-ந்தேதி டாடா குழுமத்திடம் அளித்தது. இதன் அடுத்தகட்டமாக, ஏர் இந்தியா பங்குகளை டாடா நிறுவனம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

இதில் மத்திய அரசும், டாடா சன்ஸ் நிறுவனமும் கையெழுத்திட்டதாக முதலீட்டு துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்தார்.

Next Story