தேசிய செய்திகள்

டெல்லி: அடுக்குமாடி வீட்டில் தீ விபத்து - 4 பேர் பலி + "||" + Four people have died in a fire at a three-storey building in delhi

டெல்லி: அடுக்குமாடி வீட்டில் தீ விபத்து - 4 பேர் பலி

டெல்லி: அடுக்குமாடி வீட்டில் தீ விபத்து - 4 பேர் பலி
டெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
டெல்லி,

தலைநகர் டெல்லியின் பழைய சீமாபுரி பகுதியில் 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீடு உள்ளது. இந்நிலையில், அந்த அடுக்குமாடி வீட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

இதனால், வீட்டின் 3-வது மாடியில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு அதிகாலை தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்ட வீடு உள்ள பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் வீட்டில் பரவிய தீயை அணைத்தனர். 

ஆனால், தீயணைப்பு வருவதற்கு முன்னர் வீட்டின் 3-வது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேரும் தீ விபத்தில் சிக்கி உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது
2. டெல்லியில் ஆன்லைன் செயலி மூலம் வழிப்பறி, திருட்டுக்கு சில நிமிடங்களில் நடவடிக்கை
வழிப்பற்றி, திருட்டு குறித்து உடனடியாக இணையதளம் மூலமாக E-FIR பிரிவில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. டெல்லியில் 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த இன்றைய கொரோனா பாதிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது
4. டெல்லியில் வார இறுதி ஊரடங்கு ரத்து ; இரவு ஊரடங்கு நீடிக்கும்
டெல்லியில் வார இறுதி நாட்களில் அமலில் இருந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் 8 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது