காங்கிரசில் மாநில அளவிலான தலைவர்களிடையே தெளிவும், ஒற்றுமையும் இல்லை: சோனியா காந்தி வேதனை


காங்கிரசில் மாநில அளவிலான தலைவர்களிடையே தெளிவும், ஒற்றுமையும் இல்லை: சோனியா காந்தி வேதனை
x
தினத்தந்தி 26 Oct 2021 11:23 AM GMT (Updated: 26 Oct 2021 11:23 AM GMT)

பா.ஜ.க ஆர்எஸ்எஸ்ஸின் கொடூரமான பிரசாரத்தை கட்சி கருத்தியல் ரீதியாக எதிர்த்துப் போராட வேண்டும் அரசாங்கத்தின் பொய்களை அம்பலப்படுத்த வேண்டும் என சோனியாகாந்தி கூறினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் வைத்து இந்த கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவாவில் 2022ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கட்சி உறுப்பினர் சேர்க்கை, பயிற்சி, போராட்டத் திட்டம் போன்ற விஷயங்கள் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் பேசிய சோனியாகாந்தி கூறியதாவது:-

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொய் பிரசாரங்களுக்கு எதிராக கொள்கை ரீதியாக போராட வேண்டும். இந்த போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால், அவர்களின் பொய் பிரசாரத்தை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும்.

நாடு சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள் குறித்தும் காங்கிரஸ் மேலிடம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. ஆனால், மாவட்டம் மற்றும் தொகுதி ரீதியாக அவை சென்றடைவதில்லை என்பது எனது அனுபவம் ரீதியாக தெரியவந்துள்ளது. கொள்கை ரீதியாக சிக்கல்களும் உள்ளன. அதில், நமது மாநில அளவிலான தலைவர்கள் இடையே கூட தெளிவு மற்றும் ஒற்றுமை இல்லாததை புரிந்து கொள்கிறேன்.

கடைசியாக, கட்டுப்பாடும், ஒற்றுமையும் தான் இந்த நேரத்தில் மிக முக்கியம் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். கட்சியை பலப்படுத்துவதை நாம் முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நாம், தனிப்பட்ட லட்சியங்களை மீறினால் மட்டுமே நடக்கும். இதன் அடிப்படையில் தான் தனிப்பட்ட மற்றும் கூட்டு வெற்றி கிடைக்கும். 

தற்போது மத்தியில் ஆளும் கட்சியின் "பாதிக்கப்பட்டவர்களுக்காக" கட்சி தனது போராட்டத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Next Story