வடமாநிலங்களில் ஊடுருவிய கொரோனா 4.2: பீதியில் மக்கள்


வடமாநிலங்களில் ஊடுருவிய கொரோனா 4.2: பீதியில் மக்கள்
x
தினத்தந்தி 28 Oct 2021 5:46 AM GMT (Updated: 28 Oct 2021 5:46 AM GMT)

பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா 4.2 வட மாநிலங்களில் பரவியிருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வரும் நிலையில், அதன் டெல்டா மாறுபாடுகளால் உலகம் முழுவதும் மக்களிடையே பீதி ஏற்பட்டு வருகிறது. ரஷியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் டெல்டா பிளஸ் மாறுபாடு கொரோனா (கொரோனா 4.2) காரணமாக பெரும் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் கொரோனா 3-வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள். இந்த நிலையில், கர்நாடகத்தில் டெல்டா பிளஸ் மாறுபாடு வைரஸ் பாதிப்புக்கு பலர் உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேசம், இந்தூரில் உருமாற்றமடைந்த  (கொரோனா 4.2) என்ற வைரஸ் பரவியுள்ளது.. பிறகு மராட்டியம்  இந்த வைரஸ் ஊடுருவி உள்ளது. (கொரோனா 4.2 )வைரஸானது, இதற்கு முன்பு உருமாற்றமடைந்த வைரஸ் கிருமிகளை விட, 6 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டதாம்.  (கொரோனா 4.2)  எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா என்பது குறித்து ஐசிஎம்ஆர், எம்சிடிவி ஆய்வு செய்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் 3 பேருக்கும், பிற மாவட்டங்களில் 4 பேருக்கும் இந்த டெல்டா பிளஸ் மாறுபாடு வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மராட்டியம், மத்திய பிரதேசம், கர்நாடகாவில் கொரோனா 4.2 வைரஸ் பாதிப்பு காரணமாக கொரோனா 3-வது அலை உருவாக வாய்ப்புள்ளதாக மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா 3-வது அலை உருவாகாமல் தடுக்கவும், கொரோனா 4.2 வைரஸ் பரவுவதை தடுக்கவும் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Next Story