அரியானா: வரும் டிசம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளையும் முழு அளவில் திறக்க முடிவு


அரியானா:  வரும் டிசம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளையும் முழு அளவில் திறக்க முடிவு
x
தினத்தந்தி 26 Nov 2021 2:58 AM IST (Updated: 26 Nov 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

அரியானாவில் வருகிற டிசம்பர் 1ந்தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் முழு அளவில் திறக்கப்படும் என கல்வி மந்திரி கூறியுள்ளார்.






சண்டிகார்,

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருகிற சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அரியானா கல்வி மந்திரி செய்தியாளர்களிடம் கூறும்போது, வருகிற டிசம்பர் 1ந்தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் முழு அளவில் திறக்கப்படும் என கூறியுள்ளார்.

எனினும், முன்பு போலவே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும்.  வருங்காலத்தில் கொரோனா தொடர்புடைய விவகாரங்கள் எதுவும் ஏற்பட்டால், அதுபற்றி அரசு உடனடி முடிவு மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story