சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிவிட்டு வந்த இளம் பெண், ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை ..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Nov 2021 10:30 AM GMT (Updated: 26 Nov 2021 10:30 AM GMT)

சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிவிட்டு வந்த இளம் பெண், ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரா,
 
உத்தரபிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுக்கு சமூக வலைதளம் மூலம்  ஒரு வாலிபர் அறிமுகமானார், அவர் அரியானா மாநிலம் பல்வால் பகுதியைச் சேர்ந்த தஜ்வீர். இருவரும்  அடிக்கடி சமூக வலைதளம் மூலம் பேசிக்கொண்டனர். பின்னர் நெருங்கிய நண்பர்களாகினர். தஜ்வீர், ரொம்ப நல்லவர் என்று நம்பினார் அந்த இளம் பெண்.

இந்நிலையில், அவருக்கு சப்  இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு ஆக்ராவில் நடந்தது. இதற்காக தான் ஆக்ரா செல்ல இருப்பதாகக் அந்த வாலிபரிடம் கூறியுள்ளார். உங்கள் ஊரில் இருந்து பேருந்தில் வரவேண்டாம், நான் கார் கொண்டு வருகிறேன். சேர்ந்து போகலாம்  என்று கூறியிருக்கிறார் தஜ்வீர்.

இதற்கு அந்த பெண்ணும் சம்மதித்துள்ளார். சொன்னபடி அந்தப் பெண்ணின் வீட்டுக்கு காரில் வந்தார் வாலிபர். காரை டிரைவர் ஓட்டி வந்தார். அந்த பெண்ணும் நம்பி அவர் காரில் ஏறினார். ஆக்ராவில் தேர்வு எழுதிவிட்டு திரும்பும்போது, ஜாலியாக பேசிக்கொண்டு வந்த தஜ்வீர், பிறகு போதைப் பொருளை பயன்படுத்தத் தொடங்கினார். சிறிது நேரத்துக்குப் பிறகு, ஓடும் காரிலேயே அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். அந்தப் பெண் கதறியும் வாலிபர் விடவில்லை.

பின்னர் காரை, டெல்லி  ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் கோசிகாலா என்ற பகுதியில் நிறுத்தி, அந்தப் பெண்ணை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டடார். அங்கிருந்து வீட்டுக்கு வந்த இளம் பெண், நிலைமையை சொல்லி அழுதிருக்கிறார். பின்னர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார், தஜ்வீரை கைது செய்துள்ளனர்.


Next Story