வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசுக்கு அச்சம்: ராகுல் காந்தி விமர்சனம்

விவாதங்கள் இன்றி வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என ராகுல் காந்தி சாடியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் எதிர்ப்புக்கு பணிந்த மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்தது.

இதன்படி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. விவாதங்கள் இன்றி இந்த மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இது குறித்து மத்திய அரசை சாடியுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:-
இந்த நிலையில், இது குறித்து மத்திய அரசை சாடியுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:-
வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு அச்சம் கொண்டுள்ளது. விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக விவாதம் நடைபெற்று இருக்க வேண்டும். விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது மத்திய அரசின் பலவீனத்தையே காட்டுகிறது. 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்” என்றார்.
Related Tags :
Next Story