கொரோனா தடுப்பூசி பணிகள்; இலக்குகளை நிர்ணயித்து, துரிதப்படுத்த ஜெகன் மோகன் உத்தரவு


கொரோனா தடுப்பூசி பணிகள்; இலக்குகளை நிர்ணயித்து, துரிதப்படுத்த ஜெகன் மோகன் உத்தரவு
x
தினத்தந்தி 29 Nov 2021 9:55 PM GMT (Updated: 29 Nov 2021 9:55 PM GMT)

ஆந்திர பிரதேசத்தில் இலக்குகளை நிர்ணயித்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டு உள்ளார்.


அமராவதி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து வரும் சூழலில், ஒமிக்ரான் வகையை சேர்ந்த புதிய கொரோனா பாதிப்புகள் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன.  இதனை முன்னிட்டு மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, ஒமிக்ரான் பாதிப்புகள் பற்றி சுகாதார துறையினருடன் இன்று ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.  இதில் சுகாதார மற்றும் குடும்பநல மந்திரி ஏ.கே. ஸ்ரீனிவாஸ் மற்றும் பிற அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.  இதேபோன்று, இலக்குகளை நிர்ணயித்து அந்த பணிகளை முடிக்கும்படியும் கூறியுள்ளார்.  தனிமைப்படுத்தும் மையங்கள், கொரோனா நலமையங்கள் மற்றும் கொரோனா கால் சென்டர்களை ஆய்வு செய்யும்படியும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.


Next Story