சோனியா காந்தியின் நாட்கள் முடிவடைந்துவிட்டன - பாஜக துணைப்பொதுச்செயலாளர்


சோனியா காந்தியின் நாட்கள் முடிவடைந்துவிட்டன - பாஜக துணைப்பொதுச்செயலாளர்
x
தினத்தந்தி 30 Nov 2021 3:52 AM GMT (Updated: 30 Nov 2021 3:52 AM GMT)

சோனியா காந்தியின் நாட்கள் முடிவடைந்துவிட்டன என்று பாஜக துணைப்பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடருக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. 

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து நாடாளுமன்றத்தில் பாஜகவை எவ்வாறு எதிர்கொள்வது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் விடுத்திருந்த அழைப்பை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணித்துவிட்டது. அந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. 

பாஜகவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியாக திரிணாமுல் காங்கிரசை முன்னிறுத்த அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார். 

அதேபோல், ஆம் ஆத்மி கட்சியும் தேசிய அரசியிலில் தனது தளத்தை விரிவுபடுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. இதனால், தேசிய அரசியலில் காங்கிரசுக்கு மாற்று சக்தியாக தங்களை முன்னிறுத்தும் வேலைகளில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணித்தது தொடர்பாக பாஜக துணைப்பொதுச்செயலாளரும், மேற்குவங்காள மதினிப்பூர் தொகுதி எம்.பி.யுமான திலீப் கோஷ் கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக திலீப் கோஷ் கூறுகையில், எல்லா கட்சிகளும் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என விரும்புகின்றன. மம்தா பானர்ஜி எதிர்க்கட்சி தலைவராக விரும்புகிறார். சோனியா காந்தியின் நாட்கள் முடிவடைந்துவிட்டன’ என்றார். 

Next Story