பீகார் சட்டப்பேரவை வளாகத்தில் மது பாட்டில்கள் - எதிர்க்கட்சிகள் விமர்சனம்


பீகார் சட்டப்பேரவை வளாகத்தில் மது பாட்டில்கள் - எதிர்க்கட்சிகள் விமர்சனம்
x
தினத்தந்தி 30 Nov 2021 11:31 AM GMT (Updated: 2021-11-30T17:01:35+05:30)

மது விலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தின் சட்டப்பேரவை வளாகத்தில் காலி மது பாட்டில்கள் இன்று கைப்பற்றப்பட்டன.

பாட்னா,

மது விலக்கு அமலில் உள்ள  பீகார் மாநிலத்தின் சட்டப்பேரவை வளாகத்தில் காலி மது பாட்டில்கள் இன்று கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரம் இன்று அம்மாநில சட்டப்பேரவையில் எதிரொலித்தது. முதல்  மந்திரி நிதிஷ் குமார் - எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்  இருவரும் காரசாரமாக மோதிக்கொண்டனர்.  காலி மது பாட்டில்கள் கிடந்த இடத்திற்கு நேரடியாக சென்ற தேஜஸ்வி யாதவ்,  அதை புகைப்படம் எடுத்து காட்டினர். 

இது தொடர்பாக முதல் மந்திரி நிதிஷ் குமார் கூறுகையில், “சட்டப்பேரவை வளாகத்தில் மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது  மிகவும் மோசமானது. இதற்கு யார் பொறுப்பு என்பதை கண்டறிய விசாரணை நடத்துவோம்.  இதற்கு காரணமானவர்கள் தப்ப முடியாது” என்றார். 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த  தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “ இது மிகப்பெரிய விவகாரம். சட்டப்பேரவை வளாகத்திற்குள்ளாகவே மது பாட்டில்கள் கைப்பற்ற்படுகிறது எனால்,  நிதிஷ் குமார்  முதல் மந்திரியாக இருக்க   தார்மீக உரிமை இல்லை. பீகாரின் உள்துறை அமைச்சர் உறங்குகிறா?” எனக்கேள்வி எழுப்பினார். 

Next Story