சர்வதேச எல்லை பகுதியில் 4 கிலோ எடை கொண்ட போதை பொருள் பறிமுதல்
பஞ்சாபில் சர்வதேச எல்லை பகுதியில் கிடைத்த 4 கிலோ எடை கொண்ட போதை பொருளை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சண்டிகார்,
பஞ்சாபில் பெரோஸ்பூர் பிரிவில் அமைந்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியில் போதை பொருள் கடத்தப்படுகிறது என எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், எல்லை பகுதியில் மொத்தம் 4 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் பல பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. அவற்றின் மொத்த எடை 4 கிலோ ஆகும். அவற்றை பறிமுதல் செய்த எல்லை பாதுகாப்பு படையினர் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story