தேசிய அளவில் கூட்டணி முயற்சியா? சரத் பவாரை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி


தேசிய அளவில் கூட்டணி முயற்சியா? சரத் பவாரை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 1 Dec 2021 9:03 AM IST (Updated: 1 Dec 2021 9:03 AM IST)
t-max-icont-min-icon

தேசியவாத காங்கிரஸ் சரத் பவாரை மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று சந்திக்கிறார்.

மும்பை,

தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியாக திரிணாமுல் காங்கிரசை முன்னிறுத்த அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி முயற்சித்து வருகிறார். 

இதற்காக தேசிய அரசியலில் தனது கட்சியின் தளத்தை விரிவுபடுத்தும் வேலையிலும், காங்கிரசுக்கு மாற்று சக்தியாக தங்களை முன்னிறுத்தும் வேலையிலும் மம்தா பானர்ஜி இறங்கியுள்ளார். இதற்காக பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவுகளையும் பெற மம்தா திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை மம்தா பானர்ஜி இன்று சந்திக்கிறார். மும்பையில் இன்று மாலை இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. 

இந்த சந்திப்பின் போது பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக விவாதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் முயற்சியில் திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மராட்டியத்தில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 

Next Story