கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதிப்பு; முதல்-மந்திரி தலைமையில் கூடிய ஆலோசனை கூட்டம்
கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்புகளை முன்னிட்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
பெங்களூரு,
இந்தியாவின் கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தி உள்ளது. அவர்களில் ஒருவர் 66 வயதுடைய தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆண் ஆவார். மற்றொருவர் 46 வயது மருத்துவர் ஆவார்.
ஒமைக்ரான் பாதித்த 46 வயது மருத்துவருடன் தொடர்புடைய 5 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், பெங்களூரு மாநகர ஆணையாளர் கவுரவ் குப்தா இன்று கூறும்போது, ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு எல்லா இடங்களிலும் பரவியிருக்க கூடும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இந்நிலையில், கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்ட சூழலில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை உள்பட மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story