இமாசல பிரதேசத்தில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி சாதனை..!


இமாசல பிரதேசத்தில்  தகுதி வாய்ந்த அனைவருக்கும்  தடுப்பூசி செலுத்தி சாதனை..!
x
தினத்தந்தி 4 Dec 2021 10:04 PM IST (Updated: 4 Dec 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

நாட்டிலேயே முதல் மாநிலமாக இமாசல பிரதேசத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஷிம்லா, 

இமாசல பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்த தகுதி  பெற்ற  அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய முதல் மாநிலம் இமாசல பிரதேசம் ஆகும். தடுப்பூசி செலுத்த தகுதி உடைய (18-வயதுக்கு மேற்பட்டவர்கள்) 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளதாக இமாசல பிரதேச அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

அம்மாநிலத்தில் தடுப்பூசி செலுத்த தகுதியுடைய 53 லட்சத்து 86 ஆயிரத்து 393- பேரும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிலேயே முதல் மாநிலமாக அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி இமாசல பிரதேசம் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.  

இதற்காக பிலாஸ்பரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். 

Next Story