பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும்: பிஜு ஜனதாதளம் எம்.பி. கோரிக்கை
நாட்டில் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பிஜு ஜனதாதளம் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
புதுடெல்லி,
மக்களவையில் பிஜு ஜனதாதளம் எம்.பி. பார்த்ருஹரி மகதாப் பேசியதாவது:-
நமது அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், அப்போது நாடு பிரிவினையை சந்தித்ததால், பழைய முறையே தொடர முடிவு செய்யப்பட்டது. ஆனால், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, இப்போது அதுபற்றி ஆலோசித்து, பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும். சமீபத்தில், டெல்லி, அலகாபாத் ஐகோர்ட்டுகள் இதுதொடர்பாக உத்தரவிட்டுள்ளன என்று அவர் பேசினார்.
Related Tags :
Next Story