டெல்லி- கார் மீது கவிழ்ந்த லாரி: கணவன், மனைவி உயிரிழப்பு


டெல்லி- கார் மீது கவிழ்ந்த லாரி: கணவன், மனைவி உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 Dec 2021 2:40 PM IST (Updated: 9 Dec 2021 2:50 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கார் மீது டிப்பர் லாரி கவிழ்ந்ததில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.

புதுடெல்லி,

தென்மேற்கு டெல்லியின் ஆர்கே புரம் பகுதியில் அமன் என்பார் தன் மனைவி மற்றும் ஆறு வயது மகளுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற கார் மீது கவிழ்ந்தது. லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

நள்ளிரவு 12 மணிக்கு நடந்த இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது காரில் இருந்த மூவரும் சிக்கிக்கொண்டது தெரியவந்தது. தீயணைப்புப்படையினர் வந்தும் அவர்களால் லாரியை அகற்றி சிக்கியிருந்தவர்களை மீட்க முடியவில்லை. பின்னர் ஹைட்ராலிக் கிரேன் உதவியுடன் காரில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர். அவர்களது ஆறு வயது மகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story